ராக்கி சாவந்த் போல தனியார் தொலைக்காட்சியில் சுயம்வரம் நடத்திக் கோடி கோடியாகச் சம்பாதிக்கும் ஐடியாவில் இருந்த ரம்பா, சோனா ஆகிய இரு நடிகைகளும் அந்தத் திட்டத்தில் இருந்து பின் வாங்கிவிட்டார்களாம். ஏன்?


பெரும் கோடிக் கனவில் இவர்கள் சேனலை அணுக, சேனல் தரப்பில் வைக்கப்பட்ட தொகையோ ரொம்ப சொற்பம் என்கிறார்கள். இந்த பிசாத்துக் காசுக்கு ஆசைப்பட்டுக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டு இருக்கிற இமேஜையும் கெடுத்துக்கொள்வானேன்? அதுக்குப் பேசாம டி.வி சீரியலிலேயே நடிச்சிட்டுப் போயிரலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்களாம்.


இது ஒரு புறம் இருக்க, சோனாவின் நகைக்கடை வெற்றிகரமாக ஓடுகிறதல்லவா? அடுத்தும் ஒரு நகைக்கடை திறக்க ஏற்பாடு செய்துவருகிறாராம்.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்