ஸ்விங் வோட் என்ற ஆங்கில படத்தின் கதையைத்தான் கமலிடம் சொல்லியிருந்தாராம் மிஷ்கின். இராணுவ வீரன் ஒருவனின் ஒரே ஒரு வோட்டு எவ்வளவு முக்கியம் என்பதையும், அந்த ஒரு வேட்டை வைத்துக்கொண்டு அவன் எப்படியெல்லாம் பிரதமரை ஆட்டி வைக்கிறான் என்பதும்தான் கதை.


முதலில் ஒப்புக்கொண்ட கமல், பிறகு அரசியல் சாடல் கதைகள் நமக்கெதுக்கு என்ற முடிவுக்கு வந்தாராம். அதனால் வேறு கதையைப் பண்ணுங்க என்று கூறியதால் மிஷ்கின் அப்செட். ஆனாலும் சொந்தமாக ஒரு கதையை உருவாக்கலாம் என்று முழுமூச்சாக உட்கார்ந்தவர், ஒரே மாதத்தில் வேறு கதையை உருவாக்கிவிட்டாராம். கதை? வேறொன்றுமில்லை. கவுதம புத்தரின் கதைதான். காலத்திற்கேற்ப மாடர்ன் ஆக்கியிருக்கிறாராம். கமலுக்கும் சம்மதம்தானாம்.


இராமாயணத்தை எடுத்துவருகிறார் மணிரத்னம். புத்தரை எடுக்கிறார்கள் இவர்கள். பழசுக்கு எப்பவுமே வேல்யூ அதிகம்தான் போலிருக்கிறது.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்