
ஆந்திர முதல்வர் ஒய் எஸ் ஆரின் மரணம் அனைவரையும் உலுக்கி எடுத்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கும் ஆந்திராவுக்கும் கலை தொடர்பு ரொம்பவே 'திக்' என்பதால் ஷாக் ஆகி நிற்கிறார்கள் நம்மூரு நட்சத்திரங்கள். நடிகர் விஜய் தனது அரசியல் பிரவேசம் குறித்து வருகிற ஹேஷ்யங்களுக்கும், வேட்டைக்காரன் படத்திற்குமாக சேர்ந்து பதில் அளிக்க வசதியாக ஒரு பிரஸ் மீட் ஏற்பாடு செய்திருந்தார். கடைசி நேரத்தில் கிடைத்த இந்த அதிர்ச்சி தகவலால், "இன்னொரு நாளைக்கு பார்க்கலாம்" என்று கூறிவிட்டார். இதே பிரச்சனைதான் ராதாவுக்கும். ஓயாது அலைகள் என்பதற்கு உதாரணமாக தனது மகளையும் ஆந்திரா சினிமாவில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தமிழிலும் ஏராளமான வாய்ப்புகள். இது குறித்து பத்திரிகையாளர்களை சந்திக்கலாம் என்று நேரம் குறித்திருந்தவர், ஒய்எஸ்ஆரின் மரண செய்தி கேட்டு அதிர்ந்து போனாராம். பிரஸ்மீட் கேன்சல்.
ஹெலிகாப்டர் விபத்து என்றதும், ஒரு கணம் சிலிர்த்துப் போய் உட்கார்ந்துவிட்டார் பரத். ஏனென்றால் இப்படி ஒரு விபத்தை அவர் நேரில் பார்த்து சில தினங்கள்தான் ஆகிறது. சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த பரத், ஹெலிகாப்டரில் இருபது நிமிடம் ரெய்டு போனாராம். அமெரிக்காவை ஏரியல் வியூவில் சுற்றிப்பார்க்க அங்குள்ள சுற்றுலா கழகம் ஏற்பாடு செய்திருக்கிறதாம் அங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு.
இதில் ஏறிய பரத், ஜாலியாக சுற்றிவிட்டு கீழே இறங்கியதும் அதே பிளைட் மேலும் ஒன்பது பேரை ஏற்றிக் கொண்டு கிளம்பியதாம். சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் அப்படியே கீழே விழ, கண்ணெதிரிலேயே அத்தனை பேரும் அவுட். முந்தைய ட்ரிப்பை மிஸ் பண்ணி இதில் போயிருந்தால் என்னாகியிருக்கும்? அதிர்ந்து போனாராம் பரத். ஒய் எஸ் ஆரின் மரணம் இதைதான் நினைவுபடுத்தியதாம் அவருக்கு.
பயங்கரம்ப்பா....
0 comments