நியூட்டனின் மூன்றாம் விதி, இப்படி தன் தலைவிதியை மாற்றும் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் எஸ்.ஜே.சூர்யா. தெலுங்கில் இவர் இயக்கி வரும் புலி படத்தை தமிழில் எடுப்பதென்றும், அதில் தானே நடிப்பதென்றும் முடிவெடுத்திருந்தார். ஆனால் அதற்கு முன்பு தான், அரை சதவீதமாவது சூப்பர் ஆக்டராக மாறியிருக்க வேண்டும் என்பது அவரது ஆசை.

ஜெட்லி வருவாருன்னு நினைச்சிட்டு இருக்கும் போது, இட்லி மாதிரி ஒரு ஆள் வந்தால் எப்படியிருக்கும்? அப்படிதான் நியூட்டனின் ரிசல்ட் அமைந்துவிட்டது. அதிர்ச்சியானார் சூர்யா. தெலுங்கு புலியையாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது அவருக்கு. அதனால்...?

தனது பழைய தோஸ்து சிம்புவோடு கூட்டாளியாகிவிட்டாராம் மறுபடியும். பணப்பிரச்சனை காரணமாக இருவருக்கும் நடுவிலும் விரிசலோ விரிசல். கிட்டதட்ட பேசாமலே இருந்த எஸ்.ஜே.சூர்யா மீண்டும் தனது நட்பை புதுப்பித்துவிட்டார். இரண்டு பேரும் பழம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கும் கை மேல் பலன். தெலுங்கு புலியில் ஒரு தமிழ் குத்துப் பாடலை அப்படியே வைக்கப் போகிறாராம் எஸ்.ஜே.சூர்யா. அந்த பாடலுக்கு செம குத்தாட்டம் போடப் போவது நம்ம சிம்புதானாம்.

அம்பை விடட்டும், பழம் விழுதா? கிளையே விழுதான்னு பார்ப்போம்!

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்