சேவல் மாஸ்க் கொடுத்தபின் மளமளவென்று உயர ஆரம்பித்துவிட்டது கந்தசாமி கலெக்‌ஷன்.தாணுவின் அலுவலகம் பக்கம் போனால் மாஸ்க் பேக்கிங் வேலை வெகு ஜரூராக நடந்து வருகிறது.தமிழகத்தின் பல்வேறு ஏரியாக்களில் இருந்தும் வருகிற போன் கால்கள் எல்லாம் "மாஸ்க் அனுப்புங்க. ஒரே நாளில் தீர்ந்துபோச்சு" என்ற புலம்பலாகவே இருக்கிறது. இப்படி ஒரு ஐடியாவை சொன்னவர் சாட்சாத் தாணுதான்.




இந்த போன் கால்களையும், பரபரப்பான பேக்கிங்குகளையும் ஒருவித பெருமையோடு கவனித்துக் கொண்டிருந்தவர்,விரைவில் தமிழ்சினிமாவேஅதிரும்படி ஒரு அறிவிப்பை வெளியிடப்போகிறேன் என்றார் பூடகமாக. அது என்ன என்பது இருக்கட்டும்.இவர் நாலைந்து வருடங்களுக்கு முன் மாதவனுக்கும் ஸ்ரீகாந்துக்கும் தலா ஒருலட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தாராம். அதை வாங்கி அநாதை ஆசிரமத்திற்கு வழங்க உத்தரவிட்டார்தனது அலுவலக பணியாளர்களிடம். திடீரென்று அந்த நினைப்பு எப்படி வந்தது? மாஸ்க் கட்டப் பயன்படுத்தும்நியூஸ் பேப்பரில் இருவர் படமும் பிரிண்ட் ஆகியிருந்தது. அதை பார்த்ததும்தான் இந்த பழையநினைப்பு.




சேவல் பலமா கூவிருச்சேய்யா...

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்