
சன் டி.வி-யோடு கலைஞர் ஊடலில் இருந்தநேரத்தில் தொடங்கப்பட்டது கலைஞர் டிவி. இருதரப்பும்ராசியானவுடன் இரண்டு டி.வி.யும் ஒன்றாகிவிடும்என்று பேசுகிறஅளவுக்கும் சூழல்கள் மாறின. ஆனால் இப்போதும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள் என்பதுதான்கோடம்பாக்கத்தின் கிசுகிசு.
சன் டி.வி வாங்கிய படங்களிலிருந்து பாடல்களையும் காட்சிகளையும் பிற டி.வி.கள்பயன்படுத்திவருகின்றன. ஆனால் நாங்கள் வாங்கிய படத்தின் பாடல்களைகலைஞர் டி.வியில் பயன்படுத்தக் கூடாது என்று புதிதாகக் கெடுபிடி செய்ய ஆரம்பித்திருக்கிறார்களாம் சன் தரப்பில். எல்லாரும் பயன்படுத்துறாங்களேஎன்று இவர்கள் கேட்டால், அவர்கள் பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் செய்யக் கூடாது என்கிறார்களாம்.
இந்த விரிசலைப் பரபரப்பாகக் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது சினிமா வட்டாரம்.
0 comments