எஸ்.ஜே. சூர்யா சிம்புவுக்காகக் கொஞ்சம் பைனான்ஸ் வாங்கி கொடுத்திருந்தாராம். இந்தக்கொடுக்கல் வாங்கலில் சிக்கல் எழ, நெருக்கமான நட்பை முறித்துக்கொண்டார்கள் இருவரும். அதன்பின்சூர்யாவுக்குக் கடும் சரிவு. கடைசியாக இவர் எதிர்பார்த்திருந்த நியூட்டனின் மூன்றாம்விதியும் குப்புறத் தள்ளிவிட்டது.


விஜய் நடிக்க மாட்டேன் என்று மறுத்த புலி படத்தைத்தான் தெலுங்கில் பவன் கல்யாணைஹீரோவாக நடிக்க வைத்து இயக்கிக்கொண்டிருக்கிறார் சூர்யா. இந்தப் படத்தில் அப்படியேஒரு தமிழ்க் குத்துப் பாடலை வைக்க முடிவெடுத்திருக்கிறாராம். இதில் சிம்பு ஆடினால்நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டு அவருக்கு போன் அடித்தால் ஆச்சர்யம். நேர்லே வாங்க.பேசுவோம் என்றாராம்.


பிரிந்தவர் கூடினால்? ஒரே வெட்டிப் பேச்சு, அரட்டை. இறுதியில் சூர்யாவின் விருப்பத்தைநிறைவேற்ற சம்மதித்திருக்கிறார் சிம்பு. இந்த பாடலை இவரே சொந்தக் குரலில் பாடவும் போகிறாராம்.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்