லக் படம் நினைத்தளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், மும்பையில் அடுக்கு மாடி வீடு ஒன்றை சொந்தமாக வாங்க முடிவெடுத்திருக்கிறாராம் ஸ்ருதிஹாசன். அம்மாவுடன் தங்கப் போகிறாரா என்ன? அதுதான் இல்லை. அம்மா சரிகா பற்றி பேச்செடுத்தாலே மூக்கு வரை கோபம் வருகிறது பொண்ணுக்கு. ஒரு தாய் என்கிற அளவில் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு. மற்றபடி எனக்கும் அவருக்கும் பேச்சு வார்த்தையில்லை என்கிறார் ஸ்ருதி.

மகள் மும்பையில் தங்கி வாய்ப்பு தேடவும் முழு சுதந்திரம் அளித்திருக்கிறாராம் அப்பா. “நான் ஒரு பெரிய நடிகரோட பொண்ணு என்பதை எந்த நாளும் மறக்க மாட்டேன். அவருடைய புகழுக்கு களங்கம் வர்ற மாதிரியும் நடந்துக்க மாட்டேன்” என்ற ஸ்ருதியின் முழு லட்சியமும் இந்தி படங்கள் மீதே இருக்கிறது.

தமிழில்தான் முதலில் அறிமுகமாவேன் என்று நினைத்திருந்தேன். மாதவனுடன் ஜோடியாக நடிக்கவும் அழைத்தார்கள். என்ன காரணத்தாலோ அந்த படம் தள்ளிக் கொண்டே போனது. அதன்பின்தான் லக் பட வாய்ப்பு. இப்போதும் தமிழ் படங்களில் நடிக்க அழைப்பு வருகிறது. ஆனால், இந்தியில் பெரிய ஹிட் கொடுத்த பின்தான் தமிழுக்கு வருவேன் என்கிறார் தெளிவாக.

இந்தியில் ஹிட் கொடுத்துவிட்டால், பிறகு தமிழுக்கு வர எப்படி நேரம் கிடைக்கும்?

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்