
“நான் டம்மி பீஸ§ங்க... நமக்கெதுக்கு இப்படி குழி தோண்டுறாங்களோ தெரியலையே சாமீ ” என்கிறார் தருண்கோபி. மாயாண்டி குடும்பத்தார் படத்தில் ஹீரோவாக நடித்த பின் மீண்டும் இப்போது என்னை ஏதோ செய்துவிட்டாய் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். மா.கு படம் வெளியான நேரத்தில் சிம்பு, விஷாலுக்கு எதிராக இவர் ஏதேதோ பேச, கடுப்பும் காண்டுமாக எல்லா இடத்திலிருந்தும் தருண் கோபிக்கு எதிர்ப்பு அலைகள். சொந்த மாமாவான மாயாண்டி குடும்பத்தார் இயக்குனர் ராசு.மதுரவனே கூட இவரை கழற்றி விட்டுவிட்டார்.
செக்குல தள்ளியது போதாதுன்னு சீமெண்ணையையும் கவிழ்த்துவிட்ட மாதிரி, தருண்கோபிக்கு எதிராக ஒரு புயலை கிளப்பியிருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். படத்திலே நடிக்க 50 லட்சம் சம்பளம் கேட்கிறாரு தெரியுமா? இதுதான் அந்த புயல். “பரவாயில்லை, தம்பி நடிச்ச படம் நல்லாதானே ஓடுச்சு” என்ற ஆசையில் அவரது வீட்டு பக்கம் வருகிற ஒன்றிரண்டு தயாரிப்பாளர்களும் இதை கேள்விப்பட்டதும் எடுக்கிறார்கள் ஓட்டம்.
இத.. இததான் எதிர்பார்த்தேன் என்று புல்லரிக்கிறது எதிர்கோஷ்டி. “நடிகர்கள் அநியாய சம்பளம் கேட்கிறாங்கன்னுதான் நானே நடிக்க வந்தேன். என்னை போயி இப்படி சொல்றாங்களே? இது திட்டமிட்ட சதி. நான் வளர்ந்திட கூடாதுன்னு சில நடிகர்கள் கிளப்புற வதந்திதான் இது. யாரும் நம்ப வேணாம்னு சொல்லுங்க பாஸ்” என்கிறார் தருண்கோபி. “ஐம்பது லட்சம் சம்பளம் கேட்கிற அளவுக்கு நான் பெரிய ஆளு இல்லேங்க. இருபத்தைஞ்சு லட்சம் சம்பளம் கொடுக்க சொல்லுங்க. நல்ல படத்தை நானே டைரக்ட் பண்ணி தர்றேன். இப்போ வர்ற டைரக்டர்கள் கேட்கிற சம்பளத்தை கூட நான் கேட்கறதில்லீங்க. இந்த லட்சணத்திலே எனக்கு இவ்வளவு பெரிய பில்டப் கொடுக்கிறாங்களே, அடுக்குமா சார்” என்றார் ஆவேசத்தோடு.
நண்டு கதைதான் நினைவுக்கு வருது.
0 comments