கந்தசாமி வசூலித்த 37 கோடி

Posted by tamilteching Tuesday, September 1, 2009

படம் சுமார் என்ற விமர்சனத்தை மீறி கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறது கந்தசாமி. படத்தின் சென்னை உ‌‌‌‌ரிமையை வாங்கியிருக்கும் அபிராமி ராமநாதன் முதல் வாரத்திலேயே படம் ஒரு கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது என்று சந்தோஷிக்கிறார்.முதலில் சென்னையை பார்ப்போம். சென்னையில் பதினெட்டு திரையரங்குகளில் கந்தசாமி வெளியாகியிருக்கிறது. முதல் ஒரு வாரத்தில் மொத்த கலெ‌க்ச‌ன் ஒரு கோடியே எழுபத்து மூன்று லட்சத்து நாற்பத்து மூன்றாயிரத்து எழுநூற்றி எழுபத்தியெட்டு ரூபாய். இது சென்னையில் மட்டும். உலகம் முழுவதும் மொத்த கலெ‌க்சன் முதல் வாரத்தில் மட்டும் 37 கோடி ரூபாய் என்றார் சுசி.கணேசன். இடம், கந்தசாமி பிரஸ்மீட்.

தாணு, சுசி.கணேசன், விக்ரம், ஸ்ரேயா கலந்து கொண்ட இந்த பிரஸ்மீட்டில் ஆளாளுக்கு புகழ்ந்து தள்ளினார்கள். இந்தப் படத்தின் கதையை 2006 ல் சிவா‌ஜி வெளிவருவதற்கு முன்பே தாணுவிடம் கூறினேன் என்றார் சுசி. கந்தசாமி சிவா‌ஜி போல இருக்கு என்று வரும் விமர்சனத்துக்கு அவர் அளித்த பதில் இது.

தமிழ் சினிமா வரலாற்றில் கந்தசாமியின் வசூல் ஒரு சாதனை என்றார்கள் அனைவரும் மறக்காமல். போட்ட
பணம் திரும்ப கிடைத்தால் மகிழ்ச்சிதான்.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்