
இந்தியாவில் எந்த மொழியில் நல்ல படம் வெளியானாலும் ரஜினிக்கு தெரிந்துவிடும். நல்ல படங்ளை தேடிப் பார்க்கும் ரசிகன் இன்னும் அவருக்குள் இருக்கிறான். சமீபத்தில் வந்த நல்ல படங்களின் டெக்னிஷியன்கள் அனைவரும் ரஜினியால் பாராட்டப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால் ஒரு படத்தின் ரிசல்டை மட்டும் மற்றவர்கள் தெரிந்து கொள்வதற்குமுன் நேரடியாக தெரிந்து கொள்ள ஆசைப்பட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார். அந்தப் படம் மலை மலை.
தனது நண்பர் விஜயகுமாரின் மகன் நடித்திருக்கும் படம் என்பதால், படம் வெளியான மறுநாள், படத்தின் ரிசல்ட் எப்படி என விநியோகஸ்தர்கள் மூலமாக கேட்டுத் தெரிந்து கொண்ட ரஜினி, போன் மூலமாக விஜயகுமாரை தொடர்பு கொண்டு படம் நன்றாகப் போவதாகக் கூறி தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
எந்திரன் படப்பிடிப்பின் போது மற்ற டெக்னிஷியன்களிடமும் படத்தைப் பற்றி கருத்து கேட்டிருக்கிறார். விரைவில் அவருக்காக ஸ்பெஷல் ஷோ ஃபோர் பிரேமில் திரையிடப்படலாம் என்கிறார்கள்.
0 comments