
'Michael Jackson: This Is it' என்ற பெயரிலான டாக்குமென்டரி விரைவில் வெளியாகவுள்ளது.
லண்டன் பயணத்துக்காக மைக்கேல் ஜாக்சன் கடைசி நாட்களில் செய்த பயிற்சிகள், ஒத்திகைகள் அடங்கிய வீடியோ காட்சிகள் உள்ளடக்கியது இந்த டாக்குமென்டரி.
சோனி பிக்சர்ஸ் மற்றும் சோனி மியூசிக் இணைந்து இதை தயாரித்துள்ளன. கென்னி ஆர்டேகா இதை இயக்கியுள்ளார். அக்டோபர் 28ம் தேதி இந்த டாக்குமென்டரி வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
மரணத்தைத் தழுவுவதற்கு முன்பு தனது இங்கிலாந்து இசைத் தொடருக்காக தீவிரமாக தயாராகி வந்தார் ஜாக்சன். அப்போது நடந்த ஒத்திகைகள் மற்றும் பயிற்சிகள் வீடியோவில் படம் பிடிக்கப்பட்டிருந்தன. அவற்றைத்தான் தற்போது இணைத்து டாக்குமென்டரியாக்கியுள்ளது சோனி.
இதுகுறித்து ஆர்டேகா கூறுகையில், இது தனது ரசிகர்களுக்கு ஜாக்சன் தந்து விட்டுச் சென்றுள்ள பரிசு. இந்த வீடியோக்களை ஒருங்கிணைக்கும் பணியில் நாங்கள் ஈடுபட்டபோது, இது அசாதாரணமான படம் என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
உலகப் புகழ் பெற்ற ஒரு கலை மேதையின் மேடைக்குப் பிந்தைய முகத்தை இதில் ரசிகர்கள் இயல்பாக காண முடியும் என்றார் ஆர்டேகா
0 comments