ராவண் படத்துக்குப் பிறகு விக்ரம் கே.குமார் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். மோகன் நடராஜன் படத்தை தயா‌ரிக்கிறார்.

இந்தப் படத்தைக் குறித்து அதிகார‌ப்பூர்வமாக எதுவும் தெ‌ரிவிக்கவில்லை விக்ரம். அதே நேரம் செல்வராகவனின் இயக்கத்தில் நடிக்கயிருக்கும் படம் குறித்து வாய் வலிக்க பேசுகிறார்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தைத் தொடர்ந்து இது மாலை நேரத்து மயக்கம் படத்தை தொடங்கியிருக்கிறார் செல்வராகவன். இது குறுகிய கால தயா‌ரிப்பு. அதனைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார். படத்தின் கதையை கேட்ட விக்ரம், உடனே தனது சம்மதத்தை தெ‌ரிவித்தார்.

“செல்வராகவன் சொன்ன கதையில் என்னோட கேரக்டரை கேட்டதிலிருந்து அந்த கேரக்டர் என் மனசுக்குள் குடைந்து கொண்டே இருக்கிறது. எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்று காத்துக் கொண்டிருக்கிறேன்” பார்க்கிறவர்களிடமெல்லாம் சொல்லி பரவசப்படுகிறார் சீயான்.

செல்வராகவன் படமல்லவா... சீயானும் சில மாதங்கள் காத்திருக்க‌த்தான் வேண்டும்.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்