
அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்திற்காக அம்பாசமுத்திரத்தில் எத்தனை நாட்கள் ஷ§ட்டிங் எடுத்தார்கள் தெரியுமா? ஒரு வாரம்தான். மற்ற போர்ஷன் எல்லாம் சென்னையில்தான். கிட்டதட்ட படத்தையே முடித்துவிட்டார் கருணாஸ். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தான் என்பதோடு தயாரிப்பாளரும் இவரே என்பதுதான் ஆச்சர்யம். முந்தைய படமான திண்டுக்கல் சாரதி ஹிட் என்பதால் சன் டிவி இந்த படத்தையும் வாங்க முன் வந்திருக்கிறதாம். சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை அசத்தியிருக்கிறார் கருணாஸ். எப்படி?
இவர் எழுதிய ஒரு பாடலுக்கு ஒரு புதியவரை பாட வைத்திருக்கிறார். அந்த குரலை கேட்ட கவிப்பேரரசு, “ஆஹா பிரமாதம். முதல் முறை கேட்கும்போதே ஒரு மயக்கம் இருக்கே” என்று வாயார புகழ்ந்தாராம். யார் இந்த பையன் என்று விசாரித்தவர் கருணாஸ் சொன்ன பதிலை கேட்டு அப்செட்!
அந்த குரலுக்கு சொந்தக்காரரான சம்சுதீன் கண்பார்வையற்றவர். நாகர் கோவில் பகுதியில் இசைக்குழுக்களில் பாடி வருபவராம். தனது இசைக்குழுவின் சார்பாக அந்த பக்கம் போனவர் சம்சுதீனை பார்த்து அவரது குரலில் மயங்கி போனாராம். கையோடு சினிமாவில் பாட அழைத்து வந்துவிட்டாராம். அவருக்கு அடித்தது லக்கி பிரைஸ். முதல் பாடலே கவிப்பேரரசு வைரமுத்துவின் பாடல்!
0 comments