
‘ஆதி நாராயணா’ படத்தில் கருப்பாயி என்ற ஒரு பாடலை சிம்பு பாடியிருக்கிறார். யுவன் போன்ற இசையமைப்பாளர்கள் அல்லது பெரிய நடிகர்களுக்காக மட்டுமே பாடுகிற சிம்பு, புதுமுகம் கஜன் நடிக்கும் படத்தில் பாடியது எப்படி? சிம்புவிடம் அடுத்த படத்திற்கு கால்ஷீட் வாங்கலாம் என்பதால்தான் இந்த முன்னேற்பாடா? என்றால் அடித்து பிடித்துக் கொண்டு பதில் சொல்கிறார் படத்தின் இயக்குனர் வெற்றி வேந்தன்.
“அப்படியெல்லாம் இல்லைங்க. சிம்பு சார் கால்ஷீட் கிடைச்சா சந்தோஷம்தான். அதுக்காக இந்த படத்திலே பாட வைக்கலே. மியூசிக் டைரக்டர் ஸ்ரீகாந்த் தேவாவும் அவரும் நல்ல பிரண்ட்ஸ். இந்த பாடலை கம்போஸ் பண்ணியதும் சிம்பு பாடினால் நன்றாக இருக்கும் என்று அவர்தான் ஃபீல் பண்ணினார். ஃபாஸ்ட் பீட் இருந்தா நான் பாடுறேன் என்றாராம் சிம்பு. கேட்டுவிட்டு நல்லாயிருக்கு. நானே பாடுறேன் என்று முன்வந்தார்”.
“ஆச்சர்யம் என்னன்னா இந்த பாட்டு பாட அவர் சம்பளமே வாங்கலே தெரியுமா?” என்றார் வெற்றி வேந்தன். அவர் சொன்ன கூடுதல் தகவலை மீரா கேட்டிருந்தால் பேட்டியாக நினைத்திருக்க மாட்டார். மீரா பஜன் என்றே கருதியிருப்பார். எல்லாரும் சொல்றாங்க. அவங்க ஷ¨ட்டிங்குக்கு சரியா வரமாட்டாங்க. ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்கன்னு. ஆனா எங்க படத்திலே எந்த பிரச்சனையும் பண்ணலே. அவ்வளவு இன்வால்வ் மென்ட் என்றார். நெசமாங்க...
0 comments