தமிழ்படமும் இல்லாமல், சிங்கள படமும் இல்லாமல் டி.வி ஷ§ட்டிங்கில் பிஸியாக இருக்கும் பூஜாவுக்கு பெரிய ரிலீஃப் கிடைத்திருக்கிறது. அட இதுக்காகதான் காத்திருந்தோமோ என்கிற மாதிரி ஒரு கதை சொல்லி அசத்தியிருக்கிறாராம் சசி. பூ படத்தின் ரிசல்ட் ஃபூ... என்றான பிறகு அக்கடா என்று அமைதியாக இருந்த சசி, மீண்டும் புத்துணர்ச்சியோடு இறங்கிவிட்டார்.


மிக அற்புதமான ஒரு படத்தை கொடுத்தவர் என்பதால் நஷ்டத்தை ஏற்படுத்தியவர் என்றாலும், நாமே அடுத்த வாய்ப்பை தரலாம் என்று முன் வந்தார்களாம் மோசர் பேர் நிறுவனத்தினர். ஆனால் வேண்டாம் என்று மறுத்துவிட்ட சசி ஆர்யாவின் சொந்தப்பட நிறுவனத்திற்காக இந்த புதிய படத்தை இயக்கப் போகிறார்.

படத்தின் ஹீரோ? தயாரிப்பாளரான ஆர்யாவேதான். பூஜாவும் ஆர்யாவும் நெருங்கிய காதலர்கள். கல்யாணமே செய்து கொள்ளப் போகிறார்கள் என்று செய்திகள் வந்த பின்பும் அது பற்றி கவலைப்படாமல் டி.வி ஷோ ஒன்றில் பூஜாவை இரண்டு கைகளிலும் ஏந்திக் கொண்டே வந்தார் ஆர்யா. “யாரு வேணாலும் என்ன வேணாலும் சொல்லட்டும். நாங்க நெருங்கிய பிரண்ட்ஸ்” என்றார் அப்போது. உள்ளம் கேட்குமே, ஓரம்போ படங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேருகிறது ஜோடி.

படத்தோடு நிறுத்திக் கொள்வார்களா என்பது இந்த படம் முடிவதற்குள் தெரிந்துவிடும்!

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்