90தான தனது பாட்டி உடல் நலம் சரியில்லாமல் இருப்பதால் கொழும்பில் உள்ள தனது வீட்டில் தங்கி பாட்டியைப் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டாராம் பூஜா. இதனால்தான் நான் கடவுள் படத்துக்குப் பின்னர் அவரை இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாதற்குக் காரணமாம்.

சிங்களத்து பெண்ணான பூஜா நான் கடவுள் படத்தில் பிச்சைக்காரப் பெண் கேரக்டரில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது. விருதே கிடைக்கும் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

ஆனால் நான் கடவுள் படத்துக்குப் பின்னர் இந்தியாவின் எந்த மூலையிலும் பூஜாவைப் பார்க்க முடியவில்லை. சமீபத்தில்தான் அவர் பெங்களூர் திரும்பினார்.

என்னாச்சு, எங்கே போயிட்டீங்க என்று கேட்டால், எனக்கு 90 வயதில் பாட்டி உள்ளார். அவர் கொழும்பில் எங்களது வீட்டில் வசித்து வருகிறார்.

அவருக்கு உடம்பு சரியில்லை. எனது அம்மா மட்டுமே அருகில் இருந்து பார்த்துக் கொள்கிறார். அவருக்குத் துணையாக நானும் வீட்டிலேயே இருந்து பாட்டியைக் கவனித்துக் கொண்டேன். இதனால்தான் என்னைத் தேடி வந்த சில பட வாய்ப்புகளைக் கூட என்னால் ஏற்க முடியாமல் போய் விட்டது.

நான் கடவுள் ஷூட்டிங் முடிந்ததுமே கொழும்பு போய் விட்டேன். டிசம்பர் மாதத்தில்தான் புதிய படங்களை ஏற்கப் போகிறேன் என்கிறார் பூஜா.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்