
குழம்பு கொதிச்சிருச்சு, கொள்ளிக்கட்டையிலே தண்ணி ஊத்துங்கிற மாதிரி சோனியா அகர்வால் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வச்சிட்டு ஃபாரினுக்கு கிளம்பிவிட்டார் செல்வராகவன். ஒவ்வொரு முறையும் யுவன் ஷங்கர் ராஜாவையும் அழைத்துக் கொண்டு கம்போசிங்குக்கு போன மாதிரி, இந்த முறை ஜிவி.பிரகாஷ்குமாரை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாராம்.
இது மாலை நேரத்து மயக்கம் படத்திற்கான கம்போசிங் ட்ரிப் இது. ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு இவர் இயக்கப் போகும் படம் இது. தனுஷ் ஆன்ட்ரியா நடிக்கிறார்கள். பொதுவாகவே செல்வராகவனின் படத்தில் பாடல்களின் சுவை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். ஆயிரத்தில் ஒருவன் அப்படியில்லை என்ற விமர்சனம் எழுந்திருப்பதால், ஜி.வி.பிரகாஷிடம் கொஞ்சம் மெனக்கெட்டு பாடல்களை வாங்கதான் இந்த பயணமாம்.
இவரே பாடல் வரிகளை எழுதிவிட்டு வேறொருவரின் பெயரை போட்டுக் கொள்ள சொல்லிவிடுவது செல்வாவின் வழக்கம். இதை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டும் இருக்கிறார். இந்த முறை இவர்களுடன் ஒரு கவிஞரும் போயிருக்கிறார். ஆச்சர்யம் என்னவென்றால் தமிழ்சினிமாவின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவரல்ல இவர். புதுமுகம். தினந்தோறும் செல்வாவின் அலுவலகத்திற்கு வந்து வாய்ப்பு கேட்பாராம். அவர் எழுதிக் கொடுத்துவிட்டு போகும் வரிகளை சமீபத்தில் லேசாக படித்து பார்த்த செல்வாவுக்கு இன்ப அதிர்ச்சி. எல்லா வரிகளும் நன்றாக இருந்ததாம். தம்பி நீயும் வா... என்று இவரையும் கூட்டிக் கொண்டுதான் போயிருக்கிறார்.
பெரிய மனசுதான்...!
0 comments