பூனை கண்ணை திறந்திருச்சு... பூலோகமே, லைட்ட போடு!


ஆஹாவென சந்தோஷப்பட அற்புதமான வாய்ப்பை கொடுத்திருக்கிறார் நயன்தாரா. பிரபுதேவாவுக்கும் இவருக்கும் கல்யாணம் நடக்குமா? பாதியிலேயே புட்டுக்குமா? என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக விவாதிக்கும் பொதுமக்களுக்கும், எழுத ஒரு பிட் கிடைச்ச சந்தோஷத்திலே திரியும் பத்திரிகைகாரங்களுக்கும் ஒரு அற்புதமான அரையும் குறையுமான செய்தியை கொடுத்திருக்கிறார் நயன்தாரா.

ஃபேஸ்புக்கில் தொடர்ந்து அப்டேட் செய்து வரும் அவர் (அவருதானா? அல்லது வேறு யாராவதா? பகவானுக்கே வெளிச்சம்) இதுவரை டயானா மரியம் குரியன் என்ற பெயரையே பயன்படுத்தி வந்தார். கடந்த வாரத்திலிருந்து தனது பெயரை மாற்றிக் கொண்டிருக்கிறார். என்னவென்று? டயானா மரியம் பிரபுதேவா!

பொதுவாக அப்பாவின் பெயரை பின்னால் சேர்த்துக் கொள்ளும் பெண்கள் கல்யாணத்திற்கு பிறகு கணவரின் பெயரை சேர்த்துக் கொள்வதுதான் மரபு. திடீரென்று பிரபுதேவாவின் பெயரை பின்னால் சேர்த்துக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. அப்படின்னா...?

எல்லாம் முடிஞ்சுருச்சா????????????

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்