கடந்த வாரத்தில் ஒருநாள் கந்தசாமி பார்க்க வந்திருந்தார் ரஜினிகாந்த். அவர் படம் பார்க்க வரும்போது தயாரிப்பாளரும் இயக்குனரும் வரவேற்றிருக்கிறார்கள். படத்தின் நாயகனான விக்ரமும் நாயகியான ஸ்ரேயாவும் வரவில்லை. விக்ரம் தனது அடுத்த பட வேலையாக மலேசியாவில் ஹாரிஸ் ஜெயராஜூடன் கம்போசிங் வேலையில் பிஸியாம். ஸ்ரேயா மும்பைக்குப் போயிருக்கிறார். ஆனால் இதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் ரஜினி படத்தை ரசித்துப் பார்த்தாராம்.


படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரையும் மனம் விட்டுப் பாராட்டிய ரஜினி, இந்தப் பாராட்டை ஒரு டி.வி. கிளிப்பிங்காகவே கொடுத்திருக்கிறாராம். அது மட்டுமல்ல, தனது கைப்பட ஒரு கடிதமும் எழுதி பத்திரிகை விளம்பரங்களில் பயன்படுத்தச் சொல்லியிருக்கிறார்.


சூப்பர் ஹீரோதான்!
*

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்