வில்லன் ஆன ஜாக்கிசான்

Posted by tamilteching Monday, August 24, 2009

ஜாக்கி சான் நடிக்கும் படத்தை தயாரிக்கும் வேலையில் முழு மூச்சாக இறங்கிவிட்டார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். மகிழ்ச்சியைத் தர வேண்டிய இந்த செய்தி, சிலரைப் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.


கடந்த ஆறு மாதங்களாகப் பல இயக்குனர்களிடம் கதை கேட்டுப் படம் பண்ணலாம் என்று வாக்குறுதி கொடுத்தவர், எல்லாரையும் அழைத்து அப்புறம் பார்க்கலாம் என்று கூறிவிட்டாராம். காரணம், இந்த ஜாக்கி சான் படத்திற்காக இவர் செலவு செய்யத் துணிந்திருக்கிற தொகை 600 கோடி என்கிறார்கள். இவ்வளவு பெருந்தொகையை இறைத்துவிட்டு ஆபிசில் உட்கார்ந்துகொண்டு தமிழ்ப்பட வேலைகளை பார்த்துக்கொண்டிருந்தால் என்னாவது? இதுதான் ரவிச்சந்திரனின் பயம்.


உலகத்திற்கே ஹீரோவாக இருந்த ஜாக்கி, வாய்ப்பில்லாத இயக்குனர்களுக்கு வில்லன் ஆகிவிட்டாரே என்று உச் கொட்டுகிறது கோடம்பாக்கம்.
*

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்