அந்த படத்தோட டிஸ்ட்ரிபூட்டரா நீ-ன்னு கோவப்பட்டாலும் சரி, மறுபடியும் ஒரு மஹதீரா நியூஸ்...

கடந்த வாரம் ஃபோர் பிரேம்ஸ் தியேட்டரில் குடும்பத்தோட இந்த படத்தை பார்த்திருக்கிறார் நடிகர் பிரபு. அதற்கு சில தினங்களுக்கு முன்புதான் இந்த படத்தை பார்த்துவிட்டு சிரஞ்சீவியின் புதல்வரை மனதார பாராட்டியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி. தமிழ்சினிமாவில் எல்லா ஹீரோக்களும் பார்த்து வியந்த இந்த படத்தை தயாரிப்பாளர் தாணு பெரும் விலை கொடுத்து வாங்க முன் வந்தார். ஆனால், ரீமேக் என்றால் 40 கோடியாவது தேவைப்படும் என்பதால் டப்பிங் பண்ணலாமே என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் மஹதீரா தயாரிப்பாளர் அல்லு அரவிந்த்.

சிவாஜி குடும்பமும், இவரது குடும்பமும் பல வருடங்களாக பழக்கம் என்பதால்தான் அவரது வாரிசான பிரபுவுக்கு இந்த படத்தை போட்டு காண்பித்தாராம். அதற்குள் இந்த படத்தின் ரீமேக் உரிமையை சிவாஜி புரடக்ஷன் வாங்க போகிறது என்ற புரளி கிளம்பிவிட்டது.

உண்மையில் என்ன நடக்கப் போகிறது?

சிரஞ்சீவி தனது மகன் ராம்சரண் தேஜாவை தமிழில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாராம். அதனால் இந்த படத்தை டப்பிங் செய்தே வெளியிடலாமே என்ற யோசனையை சொன்னாராம் அல்லு அரவிந்திடம். அப்படியென்றால்...?

சிரஞ்சீவியின் பேச்சைதான் கேட்க போகிறார் அல்லு அரவிந்த். இப்படத்தின் மூலம் முதன் முறையாக தமிழிலும் அடியெடுத்து வைக்கப் போகிறார் இந்த மெகா தயாரிப்பாளர்! அப்படி முடிச்சு வைங்கப்பா இந்த இழுவையான மேட்டரை.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்