சினேகா விவகாரம் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே போகிறது. ராகவேந்திரா, சினேகா செல்போன்களை தடயவியல் துறை கைப்பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. இருவருக்குள்ளும் உண்மையில் நடந்தது என்ன என்பதை இந்த துறை ஆதாரபூர்வமாக தெரிவிக்கும் என்று கருதப்படுகிற அதே நேரத்தில், ராகவேந்திராவின் பெற்றோர் சென்னைக்கு வர திட்டமிட்டுள்ளார்களாம். ஒரு முறை பெங்களூர் வந்த சினேகா, ராகவேந்திராவின் கெஸ்ட் ஹவுசில் தங்கினார் என்பதற்கான ஆதாரத்தையும் சமர்ப்பிக்கப் போகிறார்களாம்.

இதற்கிடையில் ராகவேந்திரா ஒரு மோசடி பேர்வழி என்பதற்கான ஆதாரங்களும் பல்வேறு இடங்களில் இருந்து காவல் துறைக்கு குவிந்து வருகிறதாம். இன்னும் சில தினங்களில் வெளியே வரும் ராகவேந்திரா சொல்லப் போவது என்ன என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களும் ஆர்வமாக இருக்கிறார்கள். சினேகாவால் சில வருடங்களுக்கு முன் குற்றச்சாட்டுக்கு ஆளான நாக் ரவி பற்றியும் சினிமா ரசிகர்கள் இந்த நேரத்தில் நினைத்து பார்ப்பது இயல்புதானே?

கம்பெனி விஷயமாக அமெரிக்கா போயிருந்த நாக் ரவி அங்கே சாலை விபத்துக்குள்ளாகி படுத்த படுக்கையாக இருக்கிறார். பிரபல மருத்துவமனையில் அவருக்கு ட்ரீட்மென்ட் நடந்து வருகிறது. அச்சமுண்டு அச்சமுண்டு படத்திற்காக நான்கு மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருந்த சினேகா, நேரில் சென்று நாக் ரவியை சந்தித்து ஆறுதல் கூறினாராம். ஒரு காலத்தில் இவரால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தாலும், ரவிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று அவர் மனிதாபிமானத்தோடு கவலைப்பட்டதை என்னவென்று சொல்வது?

பெண் என்றால் பேயும் இறங்கும். பேயாக இருந்தாலும் பெண் இறங்குவாள் போலிருக்கிறது

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்