சைபர் கிரைம் அலுவலகத்தில் இனி நடிகைகளுக்கென்றே தனி பிரிவு திறக்க வேண்டும் போலிருக்கிறது.

நயன்தாரா, ஸ்னேகாவுக்கு அடுத்து இப்போது நடிகை அசினின் முறை. அவரது மின்னஞ்சல் முகவரியை யாரோ திருடிவிட்டார்களாம். இதனால் அந்த முகவரியிலிருந்து வரும் எந்த மின்னஞ்சலாக இருந்தாலும் அதை நம்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது கடவுச் சொல்லைத் (பாஸ்வேர்டு) திருடி, மின்னஞ்சலை பயன்படுத்தும் நபர் மீது போலீசில் புகார் தரவும் முடிவு செய்துள்ளாராம்.

இந்த வாரம் சினேகா வாரம் என்று சொல்லும் அளவுக்கு சைபர் கிரைம் போலீசாரும் சினேகாவும் மாற்றி மாற்றி மீடியாவுக்கு செய்தி வழங்கி வந்தனர், ஆபாச எஸ்எம்எஸ் அனுப்பிய ராகவேந்திரா விவகாரத்தில்.

அடுத்தபடியாக களமிறங்கியிருப்பவர் அசின்.

மின்னஞ்சல் முகவரி களவாடப்படுவதும், காணாமல் போவதும், திறக்க முடியாமல் வேறு மின்னஞ்சல் முகவரி பெறுவதும் இணைய உலகில் 'சப்பை மேட்டர்'!

ஆனால், காணாமல் போயிருப்பது நடிகையின் மின்னஞ்சல் முகவரி அல்லவா... அதுவே அந்த செய்திக்கு ஸ்டார் அந்தஸ்தை வேறு தந்துவிட்டதால், ஸ்னேகா செய்தியை பின்னுக்குத் தள்ளிவிட்டு, அசின் செய்திக்கு முக்கியத்துவம் பெருக ஆரம்பித்துள்ளது.

அசினும் இந்த விவகாரத்தை சாதாரணமாக விடுவதாக இல்லை. இந்த மின்னஞ்சலின் மூலம் தன் பெயரில் சட்டவிரோதமாக யாரும் விளையாடிவிடக் கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக சைபர் கிரைம் போலீசில் புகார் தரவிருக்கிறாராம்.

மேலும் தன்பெயரில் ஏதாவது மின்னஞ்சல் வந்தாலும் ரசிகர்கள் அதை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளாராம்.

அது சரி... எத்தனை ரசிகர்களுக்கு அம்மணியோட இமெயில் முகவரி தெரியும்... அல்லது இவர்தான் பகிரங்கமாக அதை அறிவித்திருக்கிறாரா?

என்ன கொடுமை அசின் இது!

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்