பெரிய கம்பெனி படங்களில் நடிக்காமல் சொந்தப்படம் எடுத்து சூடு போட்டுக் கொள்கிறார்களே என்ற வருத்தம் இருக்கிறது ஜி.கே.ரெட்டிக்கு. இவர் விஷால், விக்ரம் கிருஷ்ணாவின் அப்பா! தொடர் ஹிட்டுகள் கொடுத்துக் கொண்டிருக்கும் போது ஏவிஎம், கவிதாலயா போன்ற நிறுவனங்களில் இருந்து அழைப்பு வந்ததாம் விஷாலுக்கு. ஆனால் அதையெல்லாம் நிராகரித்துவிட்டு சொந்தப்படம் எடுப்பதில் குறியாக இருந்தார்கள் அண்ணனும் தம்பியும்.

ஆனால் நினைத்த மாதிரியா எல்லாம் நடக்கிறது? தொடர் தோல்வி. கோடிகளில் நஷ்டம். ஆனாலும் தன்னம்பிக்கையோடும் வெறியோடும் போராட தயாராகிவிட்டார்கள் பிள்ளைகள். நாளைக்கு பணத்தால் பிரச்சனை வரக்கூடாது என்று நினைத்த அப்பா ஜி.கே.ரெட்டி, பிள்ளைகளுக்கான சொத்தை முறைப்படி பிரித்துக் கொடுத்துவிட்டாராம்.

இப்போதும் மனம் கோணாதபடி நடந்து கொள்கிறார்கள் அண்ணனும் தம்பியும். தன்னை வைத்து தீராத விளையாட்டு பிள்ளை படத்தை தயாரிக்கும் அண்ணனுக்கு தன்னால் ஆன பங்காக ஒன்றரை கோடியை கொடுத்திருக்கிறாராம் விஷால். இவரது அக்கறைக்கும் அன்புக்கும் தலை வணங்கும் அண்ணன், வேணாம் எதுக்கு? என்றாலும் பிடிவாதமாக கொடுத்திருக்கிறாராம் தம்பி.

இந்த பாசமலர் சகோதரர்களுக்கு இந்த முறையாவது வெற்றி கிடைக்க பிரார்த்திப்போமாக!


0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்