
நாம் தமிழர் இயக்கம் சார்பாக மதுரையில் மாநாடு நடத்திய இயக்குனர் சீமான், நாம் தமிழ் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக அறிவிக்க உள்ளார்.
ஈழத்தில் போர் முடிவுக்கு வந்தாலும் தமிழர்களின் வாழ்க்கையும், அவர்களது சுய உரிமை கோரிக்கையும் அப்படியேதான் உள்ளன. முள் வேலிகளுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் கொட்டும் மழையில் நீர்வாழ் உயிரிகளைப் போல அனாதரவாக விடப்பட்டுள்ளனர். பதிவி ஆசை அரசியல்வாதிகளோ இதை கண்டிக்காமல் ஈழத்தில் நிலைமை சுமூகமாக உள்ளது என பொய் பேசி தங்களது இனவிரோத குறட்டையை தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் ஈழத்துக்கும்; தமிழினத்துக்கும் ஆதரவான தனது குரலை நாம் தமிழர் இயக்கம் மூலம் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறார் சீமான். மதுரையில் மாநாடு, பொதுக்கூட்டம், பேரணி என முழங்கிய சீமான் இம்மாத இறுதியில் பேரணி ஒன்றை பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்.
அடுத்த வருடம் இதே நாம் தமிழர் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றும் திட்டமும் அவரிடமுள்ளது. அதற்கான ஆரம்ப வேலைகளில் தற்போது பிஸியாக இருக்கிறார் சீமான். அடுத்த வருடம் மே மாத இறுதிக்குள் அரசியல் கட்சியை தொடங்க சீமான் திட்டமிட்டுள்ளார்.
0 comments