
கமல், மோகன்லால் நடித்திருக்கும் உன்னைப்போல் ஒருவன் இந்தியில் வெளியான தி வெட்னெஸ்டே படத்தின் தழுவல். ஸ்ருதி இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்திப் படத்தில் பாடல்கள் இல்லையென்றாலும் தமிழில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் மற்றும் கமல் எழுதியுள்ள பாடல்கள் உன்னைப்போல் ஒருவனில் இடம்பெறுகிறது.
அனுபம் கெர் நடித்திருந்த போலீஸ் கமிஷனர் வேடத்தில் மோகன்லாலும், நசுருதீன் ஷா நடித்திருந்த வேடத்தில் கமலும் நடித்துள்ளனர். சக்ரி படத்தை இயக்கியுள்ளார். தெலுங்கில் ஈநாடு என்ற பெயரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தில் மோகன்லாலுக்குப் பதில் வெங்கடேஷ் நடித்துள்ளார்.
ஆகஸ்டு 12 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக திட்டம். சில நடைமுறை சிக்கல்களால் அது முடியாமல் போக, அடுத்த மாதம் 18ஆம் தேதிக்கு ரிலீஸை தள்ளி வைத்துள்ளனர். வரும் 31 ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியிடப்படுகிறது. ஸ்ருதி இசையமைத்திருக்கும் முதல் படம் என்பதால் ஆடியோவை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
உன்னைப்போல் ஒருவனுக்கு பிறகு மிஷ்கின் இயக்கும் சரித்திரப் படத்தில் கமல் நடிக்கிறார்
0 comments