
விருதுகளின் நாயகனாகிஇருக்கிறார் பிரகாஷ்ராஜ். கமர்ஷியல் படங்களில் தனக்கான இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட பிரகாஷ்ராஜ், தன் சொந்த நிறுவனமான ‘டூயட் மூவிஸ்’ மூலம் அழகிய தீயே,மொழி, அபியும் நானும், வெளித்திரை போன்ற தரமான படங்களைத் தயாரித்து வருகிறார்.
மலையாள திரையுலகில் இருந்துஇந்தி திரையுலகத்திற்குச் சென்று ஷாருக்கான், சல்மான்கான் என கமரிஷியல் உலகத்தைகட்டி ஆண்ட பிரியதர்ஷன் மனத்திருப்திக்கு ஒரு படம் இயக்க யோசித்தபோது,‘காஞ்சிவரம்’ படத்தை இயக்க முடிவு செய்தார். கமர்ஷியல் வாசனை இல்லாமல் படத்தைஇயக்க எல்லோருடைய ஒத்துழைப்பையும் தேடினார்.
பிரகாஷ்ராஜ் பணம் எதுவும்பெற்றுக்கொள்ளாமல் கதை பிடித்து நடித்துக்கொடுத்தப் படம் காஞ்சிவரம். தறிநெசவாளர்களின் ஏக்கமான வாழ்வை கண்முன் நிறுத்தும் நடிப்பால் பல வெளிநாட்டுதிரைப்பட விழாக்களில் பிரகாஷ்ராஜுக்கு மரியாதை கிடைத்தது. தற்போது பெரியமரியாதையாக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெறுகிறார் பிரகாஷ்ராஜ். மேலும் இந்தஆண்டின் சிறந்த படத்திற்கான தேசிய விருதும் ‘காஞ்சிவரம்’ படத்திற்குக்கிடைத்திருக்கிறது.
தரமான படங்களுக்கான முயற்சியைஊக்கப்படுத்தும் விதமாக இந்த விருது இருப்பது குறிப்பிடத்தக்கது.பிரியதர்ஷனுக்கும், பிரகாஷ்ராஜுக்கும் தெனாலியின் வாழ்த்து
0 comments