
தொடர் தோல்விகள் வந்தபோதே துவளாதவர் அருண் விஜய். இப்போது மலை மலை என்ற ஹிட் கிடைத்திருக்கிறது. மனிதரின் எனர்ஜி லெவல் எவரெஸ்டை விட கூடியிருக்கிறது. தனது அடுத்தப் படத்துக்கு இவர் தயாராகும் விதத்தைப் பார்த்து ஆக்ஷன் ஹீரோக்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
ஆக்சன்தான் ரூட்டு என்று முடிவானதால் அடுத்தப் படமான மாஞ்சா வேலுவில் அதிரடியான சண்டைக் காட்சிகளை வைக்க ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனுடன் இப்போதே விவாதத்தை தொடங்கியிருக்கிறார். அது மட்டுமா? இன்னும் சில நாட்களில் லண்டன் போகப் போகிறாராம், ஸ்கை டைவிங் கற்றுக் கொள்வதற்காக.
ஆக்சிலரேட்டட் ஃப்ரீ ஃபால் - சுருக்கமாக ஏஎஃப்எஃப் எனப்படும் இந்த ஸ்கை டைவிங் படிப்பது அத்தனை சுலபமல்ல. முதலில் வில் ஃபவர் வேண்டும். பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் அடி உயரத்தில் இருந்து குதிப்பது என்றால் சாதாரணமா?
பதினைந்து நாள் நடக்கும் ஸ்கை டைவிங் பயிற்சியை முடித்து, அதனை சுடச்சுட தனது படத்தில் அரங்கேற்றப் போகிறாராம். எப்படி ஸ்கை டைவிங்கை படத்தில் வைப்பது என்பது குறித்து லண்டன் கிளம்பும் முன்பே கனல் கண்ணனுடன் டிஸ்கஷனை தொடங்கியிருக்கிறார்.
ஆக்சன் ஹீரோக்களை உறங்கவிட மாட்டார் போலிருக்கே.
0 comments