ரஹ்மான் போல வரவேண்டும்!

Posted by tamilteching Monday, September 7, 2009

உன்னைப்போல் ஒருவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டைரக்டர் பாலசந்தர், ஏவிஎம் சரவணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இப்படத்தின் இசையமைப்பாளர் ஸ்ருதிஹாசனை வாழ்த்தினர். பாலசந்தர் பேசும்போது-



இது இரண்டு யுகங்களின் சந்திப்பு. ஸ்ருதிஹாசன் இசையமைத்த பாடல்களை கமல் எனக்கு திரையிட்டு காண்பித்தார். அதை பார்த்துவிட்டு இந்த பெண் இந்திய அளவில் புகழ் பெறுவார் என்று சொன்னேன். வருகிற நூற்றாண்டில் ஸ்ருதி மிகப்பெரிய இசையமைப்பாளராக இருப்பார். அவர் உலகநாயகியாக வருவார். ஒரு விழாவில் நான் பேசும்போது கமல்ஹாசனுக்கு வேகத்தடை வேண்டும் என்றேன். அவர் பேசும்போது வேகத்தடையை நான் தாண்டி போய்விடுவேன் என்றார். வேகத்தடை தாண்டுவதற்காக போடப்படுவது அல்ல. மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக போடப்படுவது.

ஸ்ருதிஹாசன் பவுண்டரியை தாண்ட வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் பவுண்டரியை தாண்டி ஆஸ்கார் விருது பெற்றதை போல ஸ்ருதியும் பவுண்டரியை தாண்டி புகழ் பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

பலரது பாராட்டுகளை ஏற்றுக் கொண்ட ஸ்ருதி, விழும்போது விழக்கூடாது என்று எங்க அப்பா சொல்ல மாட்டார். எழுந்திரு என்று சொல்லுவார். என் இசைக்கு வெற்றி கிடைத்தால் அது தனி மனித வெற்றி அல்ல. என் இசைக்குழுவினர் அனைவருக்கும் கிடைத்த வெற்றியாக கருதுவேன் என்றார்.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்