
எதிலும் முன் மாதிரியாக இருப்பவர் கமல். உன்னைப்போல் ஒருவன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முந்தின தினத்தில் அவர் இணையதள பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்களது கேள்விகளுக்கு பதில் சொன்னார். சகலகலா வல்லவன், தூங்காதே தம்பி தூங்காதே போன்ற படங்களிலும் நடிக்கிறீர்கள். மகாநதி, குணா, நாயகன் போன்ற படங்களிலும் நடிக்கிறீர்கள்? உங்களது முற்போக்கு சிந்தனைக்கு சகலகலா வல்லவன் மாதிரி படங்கள் தேவைதானா? எப்போதாவது இது பற்றி யோசித்திருக்கிறீர்களா?
அதுபோன்ற படங்களையும் ரசிப்பவர்கள் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். உங்க கூட்டத்திலேயே கூட இருக்கக்கூடும். (இந்த நேரத்தில் ஒருவர் கையை உயர்த்த, ...தோ இருக்காரே என்கிறார் கமல்) சினிமாங்கிறது கபடி விளையாட்டு மாதிரி. எங்கே வேணும்னாலும் போகலாம். ஆனால் பிடிபடாமல் கவனமா திரும்பிடனும். அது மாதிதான் என்னோட நிலையும் என்றவரிடம் சமீபத்தில் பரவலாக வந்த ஒரு எஸ்எம்எஸ் குறித்தும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
சிகப்பு ரோஜாக்கள் படத்தை எடுத்தீர்கள். சிறிது காலத்திலேயே அப்படத்தில் வருவது மாதிரியே ஒரு சைக்கோ கொலையாளியை போலீஸ் கைது செய்தது. அன்பே சிவம் படத்தில் சுனாமியை பற்றி சொன்னீர்கள். அடுத்த சில வருடத்திலேயே சுனாமி வந்தது. தசாவதாரத்தில் உயிர்கொல்லி கிருமியை பற்றி சொன்னீர்கள். இதோ பன்றி காய்ச்சல் பரவுகிறது. உன்னைப் போல ஒருவன் படத்தில் தீவிரவாதிகள் குண்டு வைப்பதை பற்றி... (இடையிலேயே குறுக்கிடுகிறார் கமல்)
“...நான்தான் குண்டு வைக்கறதை பற்றி புதுசா சொல்றேன்னு நினைச்சிராதீங்க. ஏற்கனவே மும்பையிலே குண்டு வச்சிட்டாங்க. இப்படியெல்லாம் தீவிரவாதம் இருக்கக் கூடாதுன்னு சொல்ற படம்தான் அது” என்றார். ஒவ்வொரு கேள்வியையும் படு ஜோவியலாக எதிர்கொண்ட கமல், இன்னொரு கேள்விக்கு பதில் சொன்னதுதான் வெடிகுண்டு சிரிப்பு.
உங்களோட அடுத்த திட்டம் என்ன? “இந்த பிரஸ்மீட்டை சீக்கிரம் முடிச்சிரணும்ங்கிறதுதான்!”
எப்படி நம்ம கமல்...?
0 comments