காங்கிரசில் இணைவாரா பிரபு?

Posted by tamilteching Tuesday, September 1, 2009

கையில் பெரிய வலையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்கள் போலிருக்கிறது காங்கிரசில். விஜய் ராகுல் சந்திப்பு தமிழகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிற அதே நேரத்தில், ஆந்திராவில் ரோஜாவையும் விட்டு வைக்கவில்லை இவர்கள். தெலுங்கு தேசத்திலிருந்து பிய்த்துக் கொண்டு காங்கிரசில் ஐக்கியமாக போகிறாராம் ரோஸ். இணைப்பு விழாவுக்கான தேதியையும் குறித்துவிட்டார்கள். இதற்கிடையில் நடிகர் திலகத்தின் வாரிசு இளைய திலகம் பிரபுவையும் இணைக்கும் முயற்சியில் சில காங்கிரஸ் தலைவர்கள் இறங்கியிருக்கிறார்களாம்.

எப்போங்க இணைப்பு விழா? என்றால், மும்பையிலிருந்து கர்ஜிக்கிறது பார்ட்டி. ராவணா படப்பிடிப்புக்காக மும்பை வந்திருக்கேன். தமிழ்சினிமாவிலே என்னோட இரண்டாவது இன்னிங்ஸ் இது. இடையிலே சில காலம் நடிக்காமல் ஒதுங்கியிருந்தேன். ஆனால் இயக்குனர்கள் விரும்பி கேட்டதால் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களில் நடிச்சிட்டு வர்றேன். சமீபத்தில் வெளிவந்த அயன், கந்தசாமி இரண்டும் எனக்கு பெரிய பெயரை கொடுத்திருக்கு. ராவணாவிலும் மிக முக்கியமான கேரக்டர். இந்த நேரத்திலே அரசியல் அது இதுன்னு எதுக்கு டைவர்ட் ஆகணும்? என்றார்.

ரசிகர்களுக்கு வட்டம், மாவட்டம் கனவு இருக்குமே? அரசியலுக்கு வாங்க சார் என்கிறார்களாம் பிரபுவிடம். அவங்க ஆசை எப்போ நிறைவேறும் என்றால், எல்லாம் நடக்கும் போது தானா நடக்கும் என்றார். ஆஹா எல்லாருமே ‘அவர மாதிரியே’ பதில் சொல்றாங்களேப்பா...!

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்