கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஐஸ்வர்யாராயை இயக்கிய ரா‌ஜீவ்மேனன் மீண்டும் அவர் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் அவரது கணவர் அபிஷேக்பச்சன்.

அமிதாப்பச்சன், ஜெயாபச்சன் இணைந்து நடித்த அபிமான் படத்தை ரா‌ஜீவ்மேனன் ‌‌‌ரீமேக் செய்யவிருப்பதாக பலமான பேச்சு. அமிதாப் நடித்த வேடத்தில் அவரது மகன் அபிஷேக்பச்சனும், ஜெயாபச்சன் நடித்த கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யாராயும் நடிப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவித்தன. அதே போல் அபிஷேக், ஐஸ்வர்யாராய் நடிக்கும் படத்தை இயக்குவதாக தெ‌ரிவித்துள்ளார் ரா‌ஜீவ்மேனன். ‌விரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கயிருக்கிறது.

படத்தைக் குறித்து அவர் தெ‌ரிவித்திருக்கும் இன்னொரு செய்தி, இந்தப் படம் அபிமான் ‌ரீமேக் அல்ல. அபிமான் போன்ற கதையம்சம் கொண்ட படம் அவ்வளவே.

ஒரே கதையம்சம் இருப்பதுதான் ‌‌‌ரீமேக் என்று சொல்லப்படுகிறது. ரா‌ஜீவ்மேனனுக்கு அது தெ‌ரியாமல் போனது ஏனோ?

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்