க்ளைமாக்ஸ் எடுக்கும் போது மொத்த கூட்டத்தையும் வெளியே அனுப்புனா என்ன அர்த்தம்? ஏதோ பேஜாரான சீனு போல...ன்னு அர்த்தம். பில்லா படத்திலே நயன்தாரா டூ பீஸ்லே நடித்த போதும், பருத்தி வீரன் படத்திலே ப்ரியாமணியை பலாத்காரம் பண்ணுகிற காட்சியிலும் ஒட்டுமொத்த ஆளுங்களும் வெளியே இருந்தாங்க. உள்ளே இருந்தது டைரக்டரும், கேமிராமேனும் மட்டும்தான்.
மறுபடியும் ரிப்பீட்டேய்...


யோகி க்ளைமாக்ஸ் எடுக்கும் போது சுவாதி இருந்தார். படத்தின் ஹீரோ அமீர் இருந்தார். டைரக்டரும் கேமிராமேனும் மட்டும் இருந்தாங்க. "மற்றவங்க எல்லாரும் ப்ளீஸ் அவுட்..."

அப்படின்னா என்ன எடுத்திருப்பாங்க? யூகிக்க முடியலையா மகா ஜனங்களே... விடுங்க அந்த மேட்டரை. அமீரின் பெரிய மனசுக்கு இந்த இடத்திலே ஒரு உதாரணம். இம்மாதம் இரண்டாவது வாரத்தில் பேராண்மை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை வைக்க முடிவெடுத்திருக்கிறது ஐங்கரன் நிறுவனம். அதே தேதியில் தன்னோட யோகி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவையும் வைத்திருந்தாராம். மிக பிரமாண்டமாக இந்த விழாவை நடத்த முடிவு செய்திருந்த அமீருக்கு ஒரு சின்ன சிக்கலை கொடுத்தது ஐங்கரன். "அதே தேதியில் நாங்களும் விழாவை வச்சிருக்கறதால நீங்க வேற தேதியை வச்சுக்கோங்களேன்" கேட்டதும், மறுவார்த்தை பேசாமல் ஓ.கே என்றாராம் அமீர். எல்லா விழாக்களுக்கும் வந்து வாழ்த்துவது மட்டுமல்ல, இப்படியெல்லாம் ஹெல்ப் கேட்டா சரின்னு சம்மதிப்பதும் அமீரின் நல்ல குணங்களில் ஒன்று போலிருக்கு.

ஆமா, க்ளைமாக்சிலே என்ன சார் நடந்திச்சு?

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்