
மழை ஓயுற நேரத்திலே குடையை விரிச்ச கதையாக இருக்கேன்னு ஆச்சர்யப்பட்டாலும் பரவாயில்லே. பொக்கிஷம் படத்தை எப்படியாவது தூக்கி நிறுத்தியே ஆக வேண்டும் என்ற முடிவோடு புறப்பட்டிருக்கிறார் சேரன். ஏற்கனவே படத்தில் பெரும் பகுதியை நீக்கிவிட்டு படத்தை ஷார்ப் ஆக்கியதால் பல ஏரியாக்களில் நன்றாகவே பிக்கப் ஆகியிருக்கிறது படம். இதை அப்படியே தக்க வைத்துக் கொள்வதுடன் ரசிகர்களின் கவனத்தையும் கவர வேண்டும் என்ற முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக பத்து நகரங்களில் அமைந்துள்ள தியேட்டர்களுக்கு விசிட் அடிக்க முடிவெடுத்திருக்கிறார். கூடவே செல்கிறார் பத்மப்ரியா.
முதலில் திருச்சியிலுள்ள தியேட்டருக்கு விசிட் அடித்திருக்கிறார்கள் இருவரும். அப்படியே தஞ்சாவூர், நாகர் கோயில், கன்னியாக்குமரி என்று நீண்ண்ண்ண்ட பயணம் நடத்தப் போகிறார்களாம். ஒவ்வொரு ஊரிலும் ரசிகர்களுடன் கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொதுவாக இதுபோன்ற பயணங்களுக்கு தயாரிப்பாளரே ப(ய)ண உதவி செய்வது வழக்கம். ஆனால் இந்த பயணத்தை தனது சொந்த செலவில் நடத்துகிறார் சேரன்.
இன்னொரு தகவல். மிஷ்கின் இயக்கப் போகும் ஆக்ஷன் படத்திற்காக தாடி வைத்திருந்த சேரன், இப்போது தாடியை எடுத்துவிட்டார். ஆனால் மீசையை இன்னும் அடர்த்தியாக்கி முறுக்கு மீசையாக்கிவிட்டார். இந்த தோற்றம் எந்த படத்திற்காகவும் அல்ல. ஒரு சேஞ்சுக்கு. அவ்வளவே!
0 comments