
கவுதம் மேனனுக்கும், சமீராரெட்டிக்கும் காதல், கத்தரிக்காய் என்று செய்திகள் வெளியாக ஆரம்பித்திருக்கிறது. வழக்கம் போல இதை இருவரும் மறுத்திருக்கிறார்கள். “செய்தி பொய்யா இருந்தா எதுக்கு சென்னைக்கு வரணும் சமீரா?”ன்னு கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் கோடம்பாக்கத்தில். வேறொன்றுமில்லை. சுமார் ஒரு லட்ச ரூபாய் வாடகைக்கு சென்னையிலேயே வீடு எடுத்து தங்கிவிட்டார் சமீரா ரெட்டி.
நுங்கம்பாக்கத்தில் பிரபலமானவர்கள் வசிக்கும் ஏரியாவில் அட்டகாசமான பங்களா ஒன்றை வாடகைக்கு எடுத்திருக்கிறார். இவரது இந்த முடிவுக்கு காரணம் கவுதம் மேனனும் அல்ல. கண்றாவி காதலும் அல்ல என்கிறார்கள் இன்னொரு தரப்பில். அசின், த்ரிஷா, ஸ்ரேயாவின் பாலிவுட் நோக்கிய இடப்பெயர்ச்சி ஒரு சின்ன வெற்றிடத்தை உருவாக்கியிருக்கிறது கோடம்பாக்கத்தில். அதை நிரப்ப வேண்டும் என்பதுதான் சமீராவின் கனவாம்.
முன்னணி நடிகைகளிடம் மேனேஜராக இருந்த ஒருவரை தனது மேனேஜராக்கிக் கொண்டிருக்கும் சமீரா, நாளரு கம்பெனி, பொழுதொரு இயக்குனர் என்று கதை கேட்பதிலும், சம்பளம் பேசுவதிலும் பிஸியாகியிருக்கிறாராம். தமிழில் முன்னணி ஹீரோக்கள் எல்லாருடனும் நடிக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.
சமீராவின் சென்னை வரவு, பல முன்னணி நடிகைகளுக்கு லேசாக வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியான செய்தி.
0 comments