
பன்றிக் காய்ச்சல் பரவல் தொடர்பாக காலைக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டால் அதை செயல்படுத்தத் தயாராக இருக்கிறோம் என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்க காலைக் காட்சிகளை ரத்து செய்யும் யோசனையில் இருப்பதாக சமீபத்தில் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் இளங்கோ தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக திரையரங்க உரிமையாளர்களுக்கும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் அண்ணாமலை கூறுகையில்,
இந்த பிரச்சினையில் அரசுடன் ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம். ரயில் நிலையங்கள், பஸ்நிலையங்கள் போல் பெருங்கூட்டம் கூடும் பகுதியாக தியேட்டர்கள் இல்லை.
இருப்பினும் காலைக் காட்சிகளை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டால், வற்புறுத்தினால் அதை நிறைவேற்ற தயாராகவே இருக்கிறோம் என்றார்.
சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தலைவர் அபிராமி ராமநாதன் கூறுகையில், இதுவரை அப்படிப்பட்ட யோசனை எதுவும் அரசிடமிருந்து வரவில்லை. வந்தால் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் என்றார்
0 comments