விக்ரம் 24!

Posted by tamilteching Wednesday, August 26, 2009

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்துக்கு 24 என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

அந்நியனுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படங்கள் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது, வெற்றியின் விகிதமும் குறைந்துவிட்டது.

சமீபத்தில் அவர் நடித்து வெளியான கந்தசாமிக்காக கிட்டத்தட்ட 3 வருடங்களைச் செலவிட்டார் விக்ரம். ஆனால் பொழுதுபோக்குப் படமான கந்தசாமியை, அது வெளியான தினத்திலிருந்தே ஒரு கும்பல் மோசமான எஸ்எஸ்எம்கள் அனுப்பியும், பிளாக்குகளில் விமர்சனங்கள் என்ற பெயரில் தாறுமாறாக திட்டி எழுதியும் வருகிறார்கள்.

இதில் ரொம்பவே அப்ஸெட் ஆகியுள்ளார் விக்ரம். ஆனால் விக்ரம் தரப்பிலிருந்து இந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கக் கூட யாருமில்லை. அதைவிடக் கொடுமை, அவரது பேட்டி என்ற பெயரில் கற்பனையான ஒன்றை பக்கம் பக்கமாக எழுதி செய்தியாளர்களிடம் திணித்து வருகிறது விக்ரமைச் சுற்றியுள்ள ஒரு கும்பல் (கடந்த சில தினங்களாக அவர் மலேசியாவில் இருந்தார்!).

இந்த நிலையில் இனி நிச்சயம் ஆண்டுக்கு இரு படங்கள் என்ற தனது கொள்கையை நிறைவேற்றியே தீருவேன் என கூறிவரும் விக்ரம் அதன் முதல் கட்டமாக மோகன் நடராஜனின் ராஜகாளியம்மன் மீடியாஸுக்காக புதிய படத்தில் நடிக்கிறார்.

விக்ரம் குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு 24 (இருபத்தி நாலு) எனத் தலைப்பிட்டுள்ளதாகத் தெரிகிறது. 'கேடி'க்குப் பிறகு கோடி கொடுத்தாலும் வரமாட்டேன் என அடம் பிடித்துக் கொண்டிருந்து தெலுங்கு ஹாட் நடிகை இலியானாவை இந்தப்படத்துக்காக அழைத்து வந்திருக்கிறார்கள். இவர்தான் விக்ரமுக்கு ஜோடி.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் உருவாகும் படம் இது.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்