கந்தசாமி படத்தில் வில்லன் வைத்திருக்கும் சொகுசு பஸ் பற்றி ரசிகர்கள் அலசிக் கொண்டிருக்க, கந்தசாமிக்காகவே ஒரு பஸ்சை உருவாக்கி ஓட விட்டிருக்கிறார் அபிராமி ராமநாதன். இப்படத்தின் சென்னை நகர விநியோகஸ்தர் இவர். பரபரப்பான சென்னை நகரில் விறுவிறுப்பாக ஓடத்துவங்கியிருக்கிறது இந்த பஸ்! இதனால் என்னென்ன சவுகர்யம்?


கந்தசாமி படத்தின் டிக்கெட் வாங்க தியேட்டர் வரைக்கும் அலைய தேவையில்லை. இந்த பஸ் நிற்கிற இடத்தில் பணத்தை கொடுத்தால் அங்கேயே டிக்கெட் தயார். இப்படத்தின் ஸ்டில்கள், டிரெய்லர் என்று பொதுமக்கள் நின்ற இடத்தில் வைத்தே அவர்களை ரசிக்க வைக்க ஏராளமான ஐட்டங்களை தாங்கி உலா வருகிறது இந்த பஸ். முதல் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய் கொடுத்து பஸ்சிற்குள்ளேயே பெற்றுக் கொண்டார் தயாரிப்பாளர் தாணு. பின்பு இவர் கொடியசைத்ததும் கிளம்பியது கார்.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கிய செய்தி. போர் பிரேம்ஸ் தியேட்டரில் கந்தசாமியை கண்டு களித்தாராம் ரஜினி. படத்தில் நடித்த அத்தனை பேரையும் மனசார பாராட்டியவர், இந்த படத்தின் பிரமோஷனுக்காக சில வார்த்தைகள் பேசியிருக்கிறாராம். இதை அப்படியே முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்ப போகிறார்கள். தாணுவிடம், “நான் பேசியதை இப்பவே டி.வியில் போட வேண்டாம். முதல் இரண்டு வாரங்கள் கந்தசாமி ஃபுல்லாக ஓடட்டும். அதன் பின் போடுங்கள்” என்றாராம். “ஏதோ வந்தோம், படத்தை பார்த்தோம். அதுபற்றி நாலு வார்த்தை பேசினோம்னு போகாமல் அக்கறை எடுத்து சொன்னாரே, அதுதான் ரஜினி மனசு” என்று நெகிழ்ந்து போயிருக்கிறார் தாணு.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்