சினிமாவை விட பெரும் புகழும் பணமும் விளையாட்டு துறையில் கிடைப்பதால் சானியா போன்ற வீராங்கனைகள் சினிமாவில் நடிக்க வலிய அழைத்தாலும், ஸாரி என்கிறார்கள். வேறு வழியில்லாமல் அவர் போலவே தோற்றமுள்ள பெண்ணை நடிக்க வைத்து ஆறுதல் படுகிறது தமிழ்சினிமா. இவர் மட்டுமல்ல, இவரை போல ஏராளமான விளையாட்டு வீரர்கள் சினிமா அழைப்பை நிராகரித்திருக்கிறார்கள். ஆனால் பேசு படத்தின் ஹீரோ ஜெ.விக்னேஷ் கோல்ஃப் விளையாட்டில் தேசிய அளவில் விளையாடிய சாம்பியன்.


ஒரு மழைகாலத்தில் தொடங்கி பனிக்காலத்தில் முடிகிற கதையாம் இது. பேசு என்று டைட்டில் வைத்திருக்கிறார்களே தவிர, படத்தில் டயலாக் அளவாகவே இருக்கும் என்ற உத்தரவாதம் கொடுக்கிறார் இப்படத்தின் இயக்குனர் ரா.சிரில். கூடுதல் தகவல் இப்படத்திற்கு வசனம் எஸ்.ராமகிருஷ்ணன்.

பொதுவாக ரயில்வே காட்சிகளை எடுக்க பர்மிஷனுக்காக காத்திருக்கிற படங்களுக்கு மத்தியில், துணிச்சலாக ஒரு ரயில்வே ஸ்டேஷனையே நிர்மாணித்திருக்கிறார்கள் பேசு படத்திற்காக. குலுமணாலி பகுதியில் குலாபா என்ற இடத்தில் முப்பது லட்ச ரூபாய் செலவு செய்து இந்த செட்டை போட்டிருக்கிறார்கள். ஏன் இந்த பகுதியை செலக்ட் செய்தார் இயக்குனர்? பனி படர்ந்த மலை ஒன்று ரயில்வே நிலையத்திற்கு பின்புறம் அமைய வேண்டும் என்று நினைத்தாராம். பொறுத்தமாக இருந்தது இந்த இடம்தான். அவ்வளவுதான். செட்டை போட்டுவிட்டார்கள். வனராஜன் என்ற புதிய ஆர்ட் டைரக்டர்தான் இந்த பிரமாண்டத்தின் பின்னணியில் இருக்கிறாராம்.

இது காதலர்களின் கதை மட்டுமல்ல, மற்றொரு காதல் நினைவுகளின் நீட்சியாகவும் இருக்கும் என்கிறார் டைரக்டர் சிரில். மியூசிக்-யுவன்ஷங்கர்ராஜா. எல்லாரும் சேர்ந்து என்னவோ பண்ண போறாங்கன்னு மட்டும் புரியுது!

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்