ஐஸ்வர்யாராய் நடித்துவரும் 'ராவணா" படத்திற்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதன் படக்குவினர் மீது வனத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் மணிரத்தினம் இயக்கும் ராவணா படத்தில் உலக அழகி ஐஸ்வர்யாராய், அபிஷேக்பச்சன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர்.

இவர்கள் நடிக்கும் காட்சிகள் இந்திய வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த முறையான அனுமதி பெறவில்லை என்று படக்குழுவினர் மீது புகார் எழுந்தது.

இந்நிலையில் வானப்பாதுகாப்பு சட்டப்படி ராவணா படக்குழுவினர் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் ராவணா படப்பிடிப்பு தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்