
பெண் என்றால் பேயே இறங்கும்போது பிரகாஷ்ராஜ் இறங்க மாட்டாரா? குடும்பநல கோர்ட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுவது பிரகாஷ்ராஜ்-லலிதாகுமாரி விவாகரத்து வழக்குதான். பிரிய வேண்டும் என்று பிரகாஷ்ராஜும் சேர்ந்து வாழ வேண்டும் என்று லலிதாவும் மனு கொடுக்க, மணிக்கணக்கில் கவுன்சிலிங் நடந்து வருகிறது. தனது விருப்பத்தில் உறுதியாக இருக்கிறாராம் பிரகாஷ்.
இதற்கிடையில் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அவர்களின் படிப்பு செலவுக்கும், குடும்ப செலவுகளுக்கும் சிரமப்படும் லலிதாகுமாரி, இந்த வழக்கு முடியும் வரை மாதம் இரண்டு லட்சம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று பிரகாஷ்ராஜுக்கு உத்தரவிடக் கோரி ஒரு மனுவை குடும்ப நல கோர்ட்டில் அளித்துள்ளார். இது தொடர்பான விசாரணையை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளது கோர்ட்.
வில்லன்களில் அதிக சம்பளம் வாங்குகிறவர் பிரகாஷ்ராஜ்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று நான்கு மொழிகளில் நம்பர் ஒன் வில்லனும், குணச்சித்திர நடிகரும் இவர்தான். கணவர் இப்படி கைநிறைய சம்பாதிக்கும் போது, கட்டிய மனைவி இரண்டு லட்ச ரூபாய்க்கு கெஞ்சுவது வேதனையாக இருப்பதாக கூறுகிறார்கள் சினிமா ரசிகர்கள். இந்த பிரச்சனையை அதிகம் வளர்க்காமல் ஜீவனாம்சத்திற்கு சம்மதிப்பார் என்பதே இப்போதைய யூகமாக இருக்கிறது. பார்க்கலாம் மனிதாபிமானத்தில் மதிப்பு எவ்வளவு என்று?
0 comments