கலைப்புலி எஸ். தாணு மிகப் பிரமாண்டமாகத் தயாரித்து வரும் படம், 'கந்தசாமி'. இதில் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ஸ்ரேயா நடிக்கிறார். இயக்குநர் சுசி கணேசன் இதுவரை இயக்கிய படங்களிலேயே மிக பிரமாண்ட படமாகவும் பார்ப்பவர்களை மிரளவைக்கும் படமாகவும் இயக்கி வரும் 'கந்தசாமி' யைப் பார்த்து மிரண்டு போய் இருக்கிறார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில்

நடித்து வரும் நடிகர் வடிவேலு, தான் நடித்த காட்சிகளுக்கு சமீபத்தில் டப்பிங் பேசியிருக்கிறார். அப்போது படத்தைப் பார்த்தவர் பிரமித்துப் போய்விட்டாராம்.

அதுமட்டும் இன்றி இந்த மாதிரியான திரைப்படத்தை இது வரை தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லை என்று இயக்குநர் ராஜகுமாரிடம் தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்டு 15இல் வெளியாக இருக்கும் 'கந்தசாமி' யைக் கண்டு தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி, இந்திய திரையுலகமே வியந்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை என்றாராம்.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்