'டாப் கியரில் சூர்யா!' -விஜய்

Posted by tamilteching Friday, August 21, 2009
வித்தியாசமான முயற்சிகளில் தொடர்ந்து ஜெயிக்கும் சூர்யா இன்றைக்கு டாப் கியரில் போகிறார் என நடிகர் விஜய் பாராட்டியுள்ளார்.

சூர்யா நடிக்கும் ஆதவன் பட பாடல் சி.டி. வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட விஜய் பேசியதாவது:

படத்துக்கு படம் வித்தியாசமாக ஏதோ ஒன்றை முயற்சி செய்கிறார் சூர்யா. அதில் ஜெயிக்கவும் செய்கிறார். வெளிப்படையா சொல்லணும்னா இப்போது அவர் சூர்யா டாப் கியரில் போகிறார்.

இந்தப் படம் கே.எஸ். ரவிக்குமார் படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. அவர் எந்த படத்தை இயக்கினாலும் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமா இருக்கும்.

தசாவதாரம் படத்தில் சில காட்சிகளை எப்படி எடுத்தார் என்பது எனக்கு இப்போதும் ஆச்சரியமாக இருக்கிறது. பல விஷயங்களை பிரமாண்டமா, வித்தியாசமா யோசிக்கலாம். ஆனால் சில விஷயங்களைக் காட்சியாகக் கொண்டு வருவது கஷ்டம்.

அவருக்கு ஒத்துவராத ஒரே நடிகர் நான்தான் என்று நினைக்கிறேன். மறுபடியும் என்னை நடிக்க வைத்து ஒரு ஹிட் படம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்