
இன்னும் சில தினங்களில் அகராதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. விழாவில் ஒரு விசேஷம். மறைந்த இசையமைப்பாளர் ஒருவரின் மனைவிக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. யார் கையால் இந்த நிதியை வழங்குவது என்ற குழப்பம் நிலவிய போது, பணத்தை வாங்கப் போகிற அந்த பெண்மணியே யார் கையால் பணம் வாங்கினால் சந்தோஷமாக இருக்கும் என்பதை சொன்னாராம். அவர்...?
ராகவேந்திரா லாரன்ஸ்! சமீபத்தில் சிறந்த மனிதாபிமானி விருதை முதல்வரின் கைகளால் வாங்கியவர். ஏராளமான அநாதை குழந்தைகளையும், ஆதரவற்றோர்களையும் பராமரித்து வருகிறார் லாரன்ஸ். அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, என்னை அந்த விழாவிலே கலந்து கொள்ள அழைச்சிருந்தாங்க. அப்போ இசையமைப்பாளரின் மனைவிக்கு நீங்க நிதியுதவி வழங்குறீங்க என்றார்கள். ஆனால் இதை அந்த பெண்மணியே விரும்பினார் என்பது நீங்க சொல்லிதான் தெரியும். கேட்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு.
என் பராமரிப்பில் இருக்கிற எல்லா குழந்தைகளும் முறையா ஸ்கூலுக்கு போறாங்க. அவங்களுக்கு யோகா சொல்லி தர்றோம். அதில்லாமல் இசை, ஓவியம்னு அவங்களுக்கு என்ன விருப்பம் இருக்கோ, அதையும் சொல்லி தர்றோம். என் தனிப்பட்ட ஒருவனின் முயற்சியால் இது நடக்காது. ஏராளமான உள்ளங்கள் நிதியுதவி செஞ்சுட்டு இருக்காங்க என்றார். அது மட்டுமல்ல, எட்டு கிரவுண்டில் அம்பத்தூர் அருகே ராகவேந்திரா கோவில் ஒன்றை கட்டியிருக்கிறார். விரைவில் கும்பாபிஷேகம்!
காலங்களில் அவள் வசந்தம் மாதிரி, நடிகர்களில் அவர் லாரன்ஸ்!
0 comments