
நான் ஜெயிக்கணும்னு என்னை விட யாரு அதிகம் நினைக்கப் போறாங்க? அதனாலே நானே என் படத்துக்கு இசையமைக்கிறேன்னு புது லாஜிக் சொல்லியிருக்கிறார் கருணாஸ். அடுத்தவர் விவகாரங்களில் மூக்கை நுழைக்கிற பலரும் இதைதான் இப்போது பின்பற்ற ஆரம்பித்திருக்கிறார்கள்.
என் படம் ஜெயிக்கணும். அதுக்காக மூக்கை நுழைக்கிறது தப்பா? என்கிறார்கள் இவர்கள். விஷால் படங்களில் எல்லாம் டைரக்டர் என்பவர் இஞ்சி மரபா மாதிரி செரிமானத்துக்குதான் சேர்த்துக் கொள்ளப்படுகிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக இருக்கிறது. கேட்டால் “என் படம் ஜெயிக்கணும்னு நான் அக்கறை எடுத்துக்கறதுக்கு பேரு அதுதான்னா இருந்திட்டு போகட்டுமே” என்கிறாராம் விஷால். இவரே இப்படி சொன்ன பிறகு ஒளிப்பதிவாளர் சும்மாயிருப்பாரா? டைரக்டர் சொல்ல வேண்டிய ஷாட், கட், ரீடேக் போன்ற விஷயங்களையும் இவரே சொல்கிறாராம். விளைவு...?
ஷ¨ட்டிங் ஸ்பாட்டில் ஒரே கர்புர்... தீராத விளையாட்டு பிள்ளை படப்பிடிப்பில், ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா பிரகாஷ்ராஜிடம் இன்னொரு டேக் கேட்டாராம். “எனக்கே ரீ டேக்கா? தமிழ்சினிமாவில் சீனியர் நடிகர் நான். என் நடிப்பு சரியில்லேன்னு ரீ டேக் கேட்பது ரொம்ப தப்பு” என்று கோபித்துக் கொண்ட பிரகாஷ் பொசுக்கென்று அங்கிருந்து அகல, பேஸ்த் அடித்து நின்றாராம் அரவிந்த்.
தீ.வி.பி படத்தை திரு, விஷால், அரவிந்த் கிருஷ்ணா மூவரும் டைரக்ட் செய்கிறார்கள் என்று வெளிவந்த கிசுகிசுவை நிஜமாக்கியிருக்கிறது அரவிந்தின் அத்துமீறல்
0 comments