
விட்டா தொட்டில்ல போட்டு ஆராரோ பாடிருவாங்க போலிருக்கு! வாரணம் ஆயிரம் படத்தில் 18 வயசு பையனாக நடித்திருந்தார் சூர்யா. இதுக்காக ஆறு மாசம் வெறும் இலை தழைதான் சாப்பாடு. ஆசையா சாப்பிடுற சிக்கன் பீஸ் கூட இந்த ஆறு மாசம் கட்! ஒருவழியாக இளம் வாலிபனாக அவர் திரையில் தோன்றிய போது ரசிகர்கள் அடித்த விசில் சூர்யாவின் மனசை குளிர்வித்ததோ, இல்லையோ வயிறை நிறைய வைத்தது.
மறுபடியும் இழந்த கலோரியை ஈடு செய்ய ஐயா என்ன சாப்பிட்டாரோ? இப்போ மீண்டும் பட்டினி போட்டு பஞ்சடைய வச்சிட்டாங்க பிரதரை! ஆதவன் படத்தில் பத்து வயசு பையனாக நடிச்சிருக்காராம். அப்பா திரையுலக மார்கண்டேயன். பையன் திரையுலக டீன் ஏஜ் பையனாகவே இருப்பார் போலிருக்கிறது. இந்த பத்து வயசு கெட்டப் திரையில் சில நிமிடங்களே வரும் என்றாலும் சீக்ரெட்டாக வைத்திருக்கிறார்கள் விஷயத்தை.
அப்பா மார்கண்டேயனை பற்றியும் ஒரு நியூஸ். இலக்கிய பேரூரையாற்ற கிளம்பிவிடும் இவர் அதற்காக கொடுக்கும் சன்மானங்களை சேர்த்து தான் படித்த பள்ளிக்கு வழங்கப் போகிறாராம். வருஷம் முழுக்க பேசி பேசி இவர் சேர்த்த பணம் 18 லட்சத்தை தன்னுடைய பள்ளிக்கு கொடுத்திருப்பதாக தகவல்.
ரொம்ப ஆச்சர்யமான ஃபேமிலியா இருக்கும் போலிருக்கு!
0 comments