சினேகாவின் ஏமாற்று வேலை

Posted by tamilteching Saturday, August 22, 2009

பதாகவும், அவரும் தன்னை காதலிக்க வேண்டும் என்று, ஆறு மாதங்களாக தொடர்ந்து எஸ்.எம்.எஸ்., அனுப்பி வந்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலை மிரட்டல், பெண்களை இழிவுபடுத்தி பேசுதல் உட்பட பல பிரிவுகளில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராகவேந்திராவுக்கு வேண்டப்பட்ட, பெங்களூரைச் சேர்ந்த நண்பர்கள், சினேகாவுடன் ராகவேந்திராவுக்கு ஏற்பட்ட தொடர்பு, அந்த சமயங்களில் சினேகா எவ்வாறு நடந்துகொண்டார் என்பது குறித்தும், ராகவேந்திராவுக்கு சாதகமான தகவல்களை சாட்சிகளுடன் திரட்டி வருகின்றனர்.

சொந்த வேலையாக பெங்களூரு வந்த சினேகா, ராகவேந்திராவின் கெஸ்ட் ஹவுசில் தங்கியுள்ளார். அதற்கான ஆதாரத்தை போலீசாரிடம் காட்டவும் ராகவேந்திராவின் குடும்பத்தினர் முயன்று வருகின்றனர். சினேகாவை காதலித்ததால், ராகவேந்திரா எவ்வளவு பணத்தை இழந்துள்ளார். சினேகாவின் தோழியான டான்ஸ் மாஸ்டர் மூலம் பணம், பொருள் எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற தகவல்களையும் போலீசாரிடம் தெரிவிக்க உள்ளனர். இதற்காக, ராகவேந்திராவின் குடும்பத்தினர் விரைவில் சென்னை வந்து போலீஸ் கமிஷனரை சந்திக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தங்கள் மகனின் தரப்பில் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறி, நடிகை என்ற போர்வையில் சினேகா தங்கள் மகனை ஏமாற்றி பணம் பறிக்க பார்த்தார் என, அவர்கள் திடுக்கிடும் புகார் அளிக்க உள்ளனர்.

ராகவேந்திரா குடும்பத்திற்கு வேண்டப்பட்ட சென்னையில் உள்ள முக்கிய புள்ளி ஒருவர் மூலம், இங்குள்ள உயர் போலீஸ் அதிகாரிகளை சந்தித்து உண்மை நிலவரம் குறித்து ராகவேந்திராவின் குடும்பத்தினரும், நண்பர்களும் தெரிவிப்பதுடன், சினேகா மீது புகார் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சினேகாவுக்கு மேலும் சிக்கல்கள் வரும் என்ற பரபரப்பானசூழ்நிலை உருவாகியிருக்கிறது

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்