"கந்தசாமி" - கஷ்டம்டா... சாமி!

Posted by tamilteching Sunday, August 23, 2009



"இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமரா"ன்னு சொல்வாங்கள்ல அதுமாதிரி தான் ஆச்சி கந்தசாமி படம் பாத்த கதையும்...

இன்னிக்கி அஞ்சு மணிக்குதான் ஸ்பெஷல் ஷோ போட்டாங்க, நம்ம மக்கள் அஞ்சு மணி படத்துக்கு ரெண்டு மணிக்கே வந்திருப்பாக போலிருக்கு,எல்லா சீட்டும் புல்லு,அப்புறம் புதுசா சேர் கொண்டு வந்து போட்டாங்க. அப்பாடான்னு நிமிந்து பாத்தா விக்ரம் சேவல் மாதிரி கத்திகிட்டு மன்சூர் அலிகானை புரட்டி எடுத்துக்கிட்டிருக்காரு...

ஒரே சேவல் முடி தான் படம் முழுக்க பறந்துகிட்டிருக்கு,இதையா ரெண்டு வருசமா எடுத்துகிட்டிருந்தீங்க சுசி.

நீங்க முதல்ல இருந்து தான் படத்தை பாக்கனும்னு அவசியமில்ல இடையில ஏதாவது கால்மணி நேரம் சீன்களை பாத்தாலே படத்தோட கதை என்னன்னு சூப்பரா கேட்ச் பண்ணிடமுடியும்.

அவ்ளோ புதுசா இல்லாத ரொம்ப பழசான கதை.

ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி இந்தியாவின் எதிர்க்கட்சி தலைவர் அத்வானி ஸ்விஸ் பாங்குல இருக்குற கருப்பு பணத்தை எல்லாம் இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கனும்னு பாராளுமன்றத்துல சொன்னாரு.அந்த மேட்டர்தான் படம்,

அத்வானியோட அந்த கோரிக்கையை நம்ம விக்ரம் நிறைவேற்றுவது தான் கந்தசாமி.என்ன இங்கே விக்ரம் அப்படி கொண்டு வந்த பணத்தை கவர்மென்ட் கையில ஒப்படைக்காம அவரே இல்லாத ஏழை குடும்பத்துக்கு மாறுவேஷம் போட்டுக்கிட்டு அள்ளி அள்ளி கொடுக்குறாரு...

ரொம்ப "தண்ணி"யடிப்பார் போலிருக்கு விக்ரம் மனுஷனோட முகம் அநியாயத்துக்கு சுருக்கம் விழுந்து பாக்குறதுக்கே விகாரமா இருக்கு.


நம்ம நாட்டோட கலாச்சார காவலாளி ஷ்ரேயா உதட்டோட உதடு வெச்சு முத்தம் கொடுக்குறதை எல்லாம் ரொம்ப சரியா செஞ்சிருக்காங்க.

இந்த படத்தோட கேமராமேன எங்காவது பாத்தீங்கன்னா வெளுத்திருங்க,அப்புறம் என்னங்க சும்மா ஒன்னும் இல்லாத விஷயத்துக்கெல்லாம் கேமராவை ஆட்டிகிட்டே இருந்தா பாக்குறவன் கண்ணு என்னத்துக்கு ஆகும்.

பின்னணி இசையையும்,பாடல்களையும் கேக்கும்போதே தெரிஞ்சி போயிடுது இது தேவிஸ்ரீ பிரசாத்தோட மியூசிக்தான்னு...(இன்னும் உங்க பியானோவை மாத்தலையா..? தேவி)

பாவம் பிரபு, பாக்குறதுக்கு போலீஸ் மாதிரியா இருக்காரு,படம் முழுக்க விக்ரம் தான் கந்தசாமின்னு கண்டுபிடிக்க நெறைய "க்ளுக்கள்" கிடைச்சாலும் ஊஹும்.., கிளைமாக்ஸ்லதான் கந்தசாமி யாருன்னு கண்டுபிடிக்குறாரு.., அவ்ளோ புத்திசாலியான ஆளு

தாணு ஸாரு கம்பெனி ஆரம்பிச்சி இருபத்தி அஞ்சாவது வருசத்துல வந்திருக்குற படம் இது.படம் ஓடலன்னா சுசியை சும்மா விடுவாரா என்ன?

டாய், அந்த ரிப்போர்ட்டர்,ஜூவி,நக்கீரனுக்கேல்லாம் போன போடுங்கடா...இவன சும்மா விடக்கூடாது.

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்