முத்தக்காட்சியில் நடிக்க ஸ்ரேயா மறுப்பு. கந்தசாமி படப்பிடிப்பிலிருந்து வெளியேறினார் என்று பத்திரிகைகள் பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்க, படத்திலே முத்தக்காட்சியே இல்லை. ஏன்தான் இப்படி கிளப்பிவிடுறாங்களோ என்று வேதனைப்படுகிறார் ஸ்ரேயா. தன்னை பற்றி இப்படி வருகிற செய்திகளை யாரோ கிளப்பிவிடுவதாகவும் குற்றம் சாட்டினார் அவர். உண்மையில் நடந்தது என்னவாம். அந்த காஸ்ட்யூம் விவகாரம்தான் காரணம். பிளைட் ஏறும் அவசரத்தில் எடுத்து வர மறந்துவிட்டேன். அதற்குள் முத்தம் அது இது என்று பிரச்சனை திசை திரும்பிவிட்டது என்கிறார்.

இதைப்போலவே கிளப்பி விடப்பட்ட தகவல்தானாம் அவர் ஹாலிவுட் ஹீரோ ஒருவரை காதலிப்பதாக வந்த செய்தியும். இப்படி அடுக்கடுக்காக மறுக்கும் ஸ்ரேயா, எல்லாவற்றிற்கும் சொல்லும் ஒரே பதில், நான் இதுக்கெல்லாம் கவலைப்படுற ஆள் இல்லை!

0 comments

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யவும்

Loading

விளம்பரங்கள்